More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு!
Dec 31
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.



குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த வகையை சேர்ந்த வெடிகுண்டு அது என்பது குறித்து

அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.



இறந்தவர்கள் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குவெட்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடி குண்டு வெடித்து சிதறிய பகுதியின் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கண்ணாடி துண்டுகள் மற்றும் ஆணி காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நடப்பாண்டு ஏப்ரலில் குவெட்டா நகரில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில்  ஐந்து பேர் உயிரிழந்தனர்.  12 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தான் எல்லைப்பகுதி மாகாணங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



குவெட்டா நகரில் செயல்பட்டு வரும்  பாகிஸ்தான் தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May16

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க

May17

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ

Mar02

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச

May04

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ப

Mar26

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ப

Jul22

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க

Jul30

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்

Nov03

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர

Oct05

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா

Aug20

ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 1

Apr22

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட

Aug22

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Mar04

உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

Feb24

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர