சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா.
இதில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
குறுகிய காலகட்டத்தில் பிரபலமான ரோஷினி, தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாகவே சீரியலில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர் நடிகை ரோஷினி.
மேலும் தற்போது கறுப்பு நிற உடையில் பயங்கர மாடர்னாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.