More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த நபர்கள்!
பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த நபர்கள்!
Jan 13
பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த நபர்கள்!



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி கொலைசெய்த குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவருக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.



மட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சிலரால் கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக தெரிவித்து கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .



இவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினர்களான, மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல், அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி ஆகிய இடங்களில் வைத்து 2019ஆம்ஆண்டு மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.



இதனடிப்படையில் இவர்கள் குறித்தான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்த நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதன்கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கினை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து நீக்குவதுடன் குறித்த வழக்கினை சாதாரண தண்டனைச்சட்ட கோவையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதாக உயர்நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.



மேலும், கடந்த ஆண்டு நவம்பர் குறித்த சந்தேக நபர்கள் சார்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பிணை தாக்கல்செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் குறித்த பிணை மனுவானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூவரையும் 10காசு பிணையிலும் 5இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா அனுமதியளித்துள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம

Jan27

கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த

Sep21

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த

May18

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந

Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள

Mar21

இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா

Mar16

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

May18

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ

Apr29

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ

Jan23

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள

Oct09
Sep10

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க

Aug18

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன