More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்
 பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்
Jan 13
பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால் பகுதி பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.



பொதுவாக 100 வயதைத் தொடும் பிரித்தானியர் எவருக்கும் ராணியாரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து அட்டை பெற முடியும். இந்த நடைமுறைக்கு பிரித்தானிய அரச குடும்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



அதாவது தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையில், 2045ல் பிறக்கும் ஐந்தில் ஒரு ஆண் பிள்ளை(20.9%) குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.



அதே வேளை, நான்கில் ஒரு பெண் பிள்ளை(27%) 100 வயது வரையில் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2020ல் பிறந்த 13.6% ஆண் பிள்ளைகள் 100 வயது வரையில் வாழ்வார்கள் எனவும் 19% பெண் பிள்ளைகளும் 100 வயதை கடப்பார்கள் என தெரிய வந்துள்ளது.



ஆனால், 2020ல் பிறந்த ஆண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 87.3 ஆண்டுகள் மற்றும் பெண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 90.2 ஆண்டுகள் எனவும் ONS கணித்துள்ளது.



இருப்பினும், தற்போது பிரித்தானியாவில் வாழும் மக்கள் முன்பு கணித்தபடி நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2020 ல் பிறந்த பெண் பிள்ளைகள் 2012ல் கணிக்கப்பட்டதை விட 4.8 ஆண்டுகள் முன்னதாகவும், ஆண் பிள்ளைகள் 4.5 ஆண்டுகளுக்கு முன்பும் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இங்கிலாந்தில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்

Feb19

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக

May08

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Sep13

கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை

Feb18

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து

Oct09

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற

Jan26

கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த

May30

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்

Mar05

 உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன

Mar06

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Mar25

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க

Sep13

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Feb24

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர

Jan19