கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மீனகயா புகையிரதத்தின் மீது இன்று பிற்பகல் 12.00 மணியளவில் கெக்கிராவ பகுதியில் வைத்து பயணிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெக்கிராவ புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடாமையினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் புகையிரத பெட்டிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.