கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும் என கொழும்பு துறைமுக நகர நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய தனியார் மற்றும் வணிக ரீதியிலான இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பிரிவில் இரண்டு முதல் ஐந்து பேருக்கு 30000 ரூபாயும், ஆறு முதல் பத்துப் பேருக்கு 50000 ரூபாயும், 10 பேருக்கு மேல் என்றால் கட்டணம் அதிகரிக்கும் எனவும் துறைமுக நகர நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிகப்பிரிவில் 10 பேருக்கும் குறைவான நபர்களுக்கு 100000 ரூபாயும் மற்றும் 10 பேருக்கு மேல் இருந்தால், கட்டணம் மாறுபடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் வழங்கப்படும் என துறைமுக நகர நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரின் நடைபாதை சில தினங்களுக்கு முன்னர் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த நகரை பார்க்க பெருமளவு மக்களை படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.