சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் அரசு பொருட்காட்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா தாக்கம் முடிவுற்ற பின்னர் சாதகமான சூழ்நிலை அமையபெற்றவுடன் அரசு விதிகளுக்கு ஏற்ப அரசு பொருட்காட்சிகள் சிறப்பான முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.