More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மியான்மரில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி!
மியான்மரில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி!
Sep 12
மியான்மரில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி!

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. 



இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. 



இந்த போராட்டங்கள், கிளர்ச்சியாளர்கள் குழுக்களை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மியான்மரை விட்டு வெளியே அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  



இந்நிலையில், மியான்மர் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென துபாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தங்களால் செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு அரசை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என மியான்மர் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec31

மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச

Oct03

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை

Jun16

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ

Feb15

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர

Feb11

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன

May28

உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய

Jan27

புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ

Jul06

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி

Jul25

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க

Sep29

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா

Mar16

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ

Jun25

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி

May04

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு

May21

ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று

Jan26

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்