More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நீண்ட கால கொள்கைத்திட்டத்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்றலாம் – மைத்திரி
நீண்ட கால கொள்கைத்திட்டத்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்றலாம் – மைத்திரி
Sep 12
நீண்ட கால கொள்கைத்திட்டத்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்றலாம் – மைத்திரி

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்ய முடியாது. நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன  குறிப்பிட்டார்.



கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் நபரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் உரிய பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவ்விடயத்தில் மாற்று கருத்துகள் குறிப்பிட முடியாது.



பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.



  நீண்டகால கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில்  பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.



  பொருளாதார கொள்கை ஆட்சிமாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்றமுடியாது என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Apr06

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப

Mar31

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள

Jan13


 திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி

Aug14

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட

Feb13

யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள

Oct16

நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச

Oct06

பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Mar05

  நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்

Apr07

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந

Mar29

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட

Jul01

அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்

Feb04

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்

Feb05

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப