More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு!
ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு!
Sep 20
ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க மறுப்பு - பஞ்ச்சீர் கூட்டணி படை எதிர்ப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்ற கொள்கையை தலிபான்கள் வகுத்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த போது இதே நடைமுறையை கடைபிடித்தனர்.



இப்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதிப்போம் என்று கூறி இருந்தார்கள்.



நேற்று முன்தினம் அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவிகளையும், பெண் ஆசிரியைகளையும் அனுமதிக்கவில்லை.



இதற்கு பஞ்ச்சீர் எதிர்ப்பு கூட்டணி படையினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் முழு பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், பஞ்ச்சீர் மாகாணத்தில் மட்டும் குறிப்பிட்ட பகுதிகள் எதிர்ப்பு கூட்டணி படையினர் வசம் இருக்கின்றன. அங்கிருந்து எதிர்ப்பு கூட்டணி படை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



ஆண்- பெண் என பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் சம நீதியை வழங்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கொள்கை. ஆனால் தலிபான்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள். முதலில் பெண்களை கல்வி கற்க அனுமதிப்போம் என்று கூறிவிட்டு, இப்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது.



ஆப்கானிஸ்தான் முழுவதும் பெண்களுக்கென்று பிரத்யேக பள்ளிகள் ஏராளமாக இருக்கின்றன. அந்த பள்ளிகளையும் தலிபான்கள் திறக்க அனுமதிக்கவில்லை. இதன் மூலம் பெண் கல்விக்கு எதிராக தலிபான்கள் இருக்கிறார்கள். அவர்களால் ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கி சென்றுவிடும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun23

கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார

Jul15

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்

Dec12

கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்

Jun30

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Jun25

ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ

Feb02

அமெரிக்காவில்  கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ்

Jun02

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு

Jun14

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Feb13

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிப

Apr30

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி

Aug29

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

Mar13

இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம

Oct04

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா எ

Mar15

ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக