More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு!
Sep 21
இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரை உள்ளூரில் விளையாடும் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 



அதாவது, இந்திய அணி அடுத்த 9 மாத காலத்தில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 14 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.



இதன்படி நியூசிலாந்து அணி நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. 



இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17-ம் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி ராஞ்சியில் 19-ம் தேதியும், 3-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் 21-ம் தேதியும் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25-ம் தேதியும், 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3-ம் தேதியும் தொடங்குகிறது.



அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி மாதத்தில் வந்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்கிறது. முதலாவது ஒருநாள் போட்டி ஆமதாபாத்திலும் (பிப்.6), 2-வது போட்டி ஜெய்ப்பூரிலும் (பிப்.9), 3-வது போட்டி கொல்கத்தாவிலும் (பிப்.12), முதலாவது 20 ஓவர் போட்டி கட்டாக்கிலும் (பிப்.15), 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் (பிப்.18), 3-வது போட்டி திருவனந்தபுரத்திலும் (பிப்.20) நடக்கிறது.



இதையடுத்து, இலங்கை அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 



முதல் டெஸ்ட் பெங்களூருவில் பிப்ரவரி 25-ம் தேதியும், 2-வது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5-ம் தேதியும் தொடங்குகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மொகாலியிலும் (மார்ச் 13), 2-வது போட்டி தர்மசாலாவிலும் (மார்ச் 15), 3-வது போட்டி லக்னோவிலும் (மார்ச் 18) நடைபெறுகிறது.



இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணி ஜூன் மாதத்தில் ஐந்து 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி சென்னையிலும் (ஜூன் 9), 2-வது போட்டி பெங்களூருவிலும் (ஜூன் 12), 3-வது போட்டி நாக்பூரிலும் (ஜூன் 14), 4-வது போட்டி ராஜ்கோட்டிலும் (ஜூன் 17), 5-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியிலும் (ஜூன் 19) நடக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

Oct17

ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ

Jul09

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே

Jul28

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய

Jun25

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற

Oct01

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Oct16

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி

Sep15

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Feb23

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்

Oct23

உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்