More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • 19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி...
19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி...
Sep 21
19 வருட கனவு நனவானது - நடிகர் ஜெய் நெகிழ்ச்சி...

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். 



இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார். 



இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியதாவது: “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 



 



சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார். அனல் ஆகாஷ் இப்பாடலை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep12

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா

Jun11

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க

Jan14

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு

Jun03

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று

Jun11

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்

Jan27

சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

May03

விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம

Feb21

தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத

Mar13