More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்கவே முடியாது!
தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்கவே முடியாது!
Sep 22
தேர்தல் முறையை மாற்றுவதை ஏற்கவே முடியாது!

இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து,  மாகாண சபை, நாடாளுமன்ற மக்கள் மன்றங்களை மேலும் பலவீனமாக்கி நாட்டை சர்வதிகார போக்கில் மென்மேலும் கொண்டு செல்ல ஒருபோதும் இணங்கவோ, இடமளிக்கவோ முடியாது. இந்த வரலாற்று தவறு உங்கள் தலைமையில் ஏற்பட்டது என்ற பழிச்சொல் உங்கள் மீது விழாமல்  தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கவனமாகச் செயற்பட வேண்டும்.”



– இவ்வாறு தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் . தெரிவித்தார்.



தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு நாடாளுமன்ற வளாகத்தில் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, த.மு.கூ. தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற .உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர். அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-      



நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.



இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை  மாகாண சபை, நாடாளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .



அது உண்மை. ஆனால், அந்த நிலைமை வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் ஏற்பட்டது என்பதை நான் இந்த குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கையிலும் சிங்கள இளையோர் இப்படி ஆயுதம் தூக்கினார்கள். இன்று விகிதாசார முறையின் கீழ்தான் இந்நிலைமை மாறியது.



நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனதான், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றங்களுக்கு விகிதாசார தேர்தல் முறைமையையும் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.   ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சில பிழையான செய்கைகளுக்கு மத்தியில் அவரது தீர்க்கதரிசனமிக்க சரியான செய்கை இதுவாகும்.



இன்று நீங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இன்னமும் பலமிக்கதாக 20ம் திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளீர்கள். இது உண்மை. எனவே ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.  



இலங்கையின் அனைத்து இன மற்றும் சமூக குழுவினர்களும் பிரதிநிதித்துவம் செய்ய இடந்தரும் வண்ணமும், பெரிய, சிறிய கட்சிகள் தாம் பெறுகின்ற வாக்கு தொகைகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் பெரும் வண்ணமும், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றமும், மாகாண சபைகளும் செயற்பட முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்

Feb11

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ

Jun09

ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு  ராணுவத்தினரால் வ

Jun12

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Mar25

இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு

Apr23

பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க

Dec27

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர

Jun01

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்ட

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Apr20

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்

Mar12

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம், 

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச