இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று மோடி மற்றும் அமித் ஷாவை மம்தா பானர்ஜி மறைமுகமாக தாக்கினார்.
மேற்கு வங்கத்தில் பபானிபூர் உள்ளிட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. பபானிபூர் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் அந்த தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்ற பபானிபூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:
இந்தியாவை பிரிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை (பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா) அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒற்றுமையாக இருக்கும். காந்திஜி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம் புத்தா நாட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள்.