More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுக்கும் கோட்டாபய!
கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுக்கும் கோட்டாபய!
Sep 23
கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுக்கும் கோட்டாபய!

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களைப் பேச அழைப்பது வேடிக்கையானது.



என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான உரை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,



2009 மே 26 ஆம் திகதி பான் கி – மூன் இலங்கை வந்திருந்தபோது அவருடன் மஹிந்த ராஜபக்‌ஷ இணைந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதேபோன்றே தற்போது கோட்டாபய ராஜபக்‌ஷவும் கூறுகின்றார். இவர் இப்படி கூறுகையில், நாங்கள் வெளியகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். இது இரண்டுவிதமான பேச்சு .



இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமையை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், இந்த வருடம் ஜூலை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் அது நடத்தப்படவில்லை. நாங்கள் இரண்டு மாதங்களாக அதற்காகக் காத்திருக்கின்றோம்.



ஆனால், இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி , நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களைப் பேச அழைப்பது வேடிக்கையானது. அவர் கட்டாயம் எங்களுடன் பேச வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இங்கே இருக்கின்றார்கள் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா

Feb12

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர

Sep25

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ

Jan20

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு

Sep27

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்

Feb05

கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி

May15

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த

Feb14

லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ

Jun06

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர

Feb02

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Sep29

வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை

Sep19

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர