More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி சோமு, ராஜேஷ்குமார்!
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி சோமு, ராஜேஷ்குமார்!
Sep 28
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி சோமு, ராஜேஷ்குமார்!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களுடைய எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவ்விரு இடங்களும் காலியானது. அந்த இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.



திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அவர்களுக்கான வெற்றி சான்றிதழையும் நேற்று வழங்கினார்.



இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி சோமுவும் ராஜேஷ்குமாரும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

முதல்-மந்திரி 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட

Aug19
Jun16

சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ

Jul18

சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப

Jan18

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா

Oct01

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி

Jul20