More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்.
 12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்.
Feb 09
12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்.

கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சிறுமி விளையாடிகொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



கம்பளை நில்லம்பே பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியதுள்ளது. குறித்த சிறுமி தனது அத்தையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



சிறுமியின் தந்தை கதிர்வேல் யோகராஜா கண்டி பொதுச்சந்தையில் பணிபுரிகிறார். அவர் பணிக்கு சென்ற பின்னர், தாய் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் , அவர்களின் மூன்று பிள்ளைகளும் அருகில் வசிக்கும் சிறுமியின் தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.



இதன்போது இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை படிக்குமாறு அத்தை கூறியதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை பிள்ளைகள் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமி காணாமல் போயுள்ளமை தெரிய வந்ததையடுத்து அயலவர்கள் ஒன்று திரண்டு சுற்றுவட்டார வீடுகளிலும், வனப்பகுதிகளிலும் தேடியும் சிறுமி தொடர்பில்  எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.



சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல்  வழங்கப்பட்ட பொலிசார் மோப்ப நாய்களை கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும் நேற்று வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகின்ற நிலையில், சிறுமி மாயமான சம்பவம் பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr28

வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு

Sep21

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க

Feb06

இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர

Mar13

வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற

Jul04

மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச

Mar02

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக

Apr26

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது

Jan24

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி

Feb12

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத

Jan28

அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக

Feb16

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்

Jan26

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்

Jun09
May15

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக

Sep17

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம