More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை
Feb 09
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..



சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் 32 வயதுடைய பெண் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பில் 28 வயதான பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனி பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சந்தேக நபரான குறித்த வர்த்தகர், ஜேர்மன் பெண்ணுடன் கடந்த 6 வருடங்களாக நண்பராக இருந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



ஜேர்மன் பெண்ணின் தந்தை முன்னாள் கடற்படை அதிகாரி எனவும் அவர் இலங்கையர் எனவும் தாய் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கை வந்த அவர், தங்காலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.



இதேவேளை, சந்தேகநபருடன் இரண்டு வாரங்களாக குறித்த பெண் கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கடந்த 6ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி குறித்த வர்த்தகருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.



அன்றைய தினம் இரவு விடுதிக்கு சென்ற இருவரும் மறுநாள் காலை வரை மது அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது அந்த பெண்ணின் கடன் அட்டை தொலைந்து போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



அதன் பின்னர் இரவு குறித்த பெண்ணை மயக்கமடைய செய்யும் வகையில் போதை மாத்திரையை குறித்த இளைஞன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் காலை எழுந்து பார்க்கும் போத தான் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ

Mar03

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ

Mar04

உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Feb27

ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Mar09

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb26

உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Mar04

உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த