எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த யோசனையின் வரைவு அரசாங்கத்தின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கி செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.