நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் ' அரபிக் குத்து ' நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.
6 மணியிருந்து தொடர்ந்து பல சாதனைகளை அரபிக் குத்து பாடல் செய்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் பாடல் வெளியானதை அடுத்து, வலிமை படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், அஜித்தின் வலிமை படத்தின் முதல் ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.