More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வசதி
வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வசதி
Feb 16
வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வசதி

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் பல்வேறு சுற்றுலா இடங்களை அபிவிருத்தி செய்ய   அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



சிங்கராஜ வனம் மற்றும் கலாசார முக்கோணத்துடன் தொடர்புடைய இடங்களை தெரிவு செய்து அங்கு திருமணங்களை ஏற்பாடு செய்து திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகளவான வெளிநாட்டினரை இலங்கைக்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தயாராகி வருகின்றது.



பாதுகாப்பான திருமண இடமாக இலங்கையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் திருமணத்தில் வித்தியாசமான அனுபவத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து திருமணத்தைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.



கோவிட் தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த திருமணத் துறையின் வடிவமைப்பு துறை (Fashion) மற்றும் ஏனைய துணைத் துறைகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என நம்பபப்படுகின்றது.



இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியான பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளது.



இப்பிரிவு இலங்கையில் நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்கள், திருமணங்களை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.



ஏற்கனவே ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் திருமணங்களை ஏற்பாடு செய்வதில் இலங்கை மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும் புதிய வேலைத்திட்டம் அந்த நிலையைமேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.சிங்கராஜ மழை வனம்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Feb11

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்

Feb02

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம

Jun01

உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்

ரஷ்யாவின் ஆக்க

Mar03

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ

Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம

Jan15

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்

Mar14

நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின

Feb12

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப