போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இன்றில் இருந்து இப்படத்திற்காக டிக்கெட் புக்கிங் வெவேறு இடங்களில் துவங்கியுள்ளது.
இதில், சென்னையில் பிரபல திரையரங்கம் ஒன்றில் வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது.
ஓபன் ஆன சில நிமிடங்களில் முதல் நான்கு ஷோகள் முழுமையாக புக் செய்து ரசிகர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனால், கண்டிப்பாக வலிமை படத்திற்கு ரெகார்ட் பிரேக்கிங் ஓப்பனிங் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.