தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முதியவரின் வாழ்க்கை ஒரே இரவில் திசை மாறியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா என்ற 60 வயது முதியவர் தினக்கூலி வேலைகளை தனது வாழ்க்கையை கடத்தி வருகிறார். அனைவரிடத்திலும் சிரித்த முகத்தோடு சகஜமாக பழகும் இவர் எந்த வேலை கொடுத்தாலும் அசராமல் செய்வதில் வல்லவர்.
வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நன்கு பழக்கம் கொண்ட மம்மிக்காவை அப்பகுதியைச் சேர்ந்த ஷரீக் என்ற போட்டோகிராபர் பார்த்துள்ளார். அவரின் தோற்றம் சூப்பராக இருக்க மம்மிக்காவை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் மறுத்த அவர் தான் எடுத்த போட்டோக்களை காட்டி ஷரீக் சம்மதம் பெற்றுள்ளார். 