நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா. படம் அவருக்கு செம ரீச் கொடுத்தது, படத்தின் வசூல் சொல்லவே தேவையில்லை.
இந்த படத்தில் சில காட்சிகளில் வந்து செல்பவர் கோட்டயம் பிரதீப், தமிழ் மக்களிடம் இவருக்கு இப்படம் மூலம் தான் பெரிய ரீச் கிடைத்தது.
2001ல் அதாவது இவரது 40வது வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார், அதிகம் மலையாள படங்களில் நடித்துள்ள இவர் காமெடியனாக நடித்திருக்கிறார்.
இதுவரை பிரதீப் 70 படங்கள் வரை நடித்துள்ளாராம். இன்று காலை இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட உயிரிழந்துள்ளார்.
61 வயது ஆகும் பிரதீப் அவர்களின் திடீர் மரண செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.