More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா?
நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா?
Feb 17
நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா?

மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவு பொருள் தான் நெல்லிக்காய்.



நெல்லிக்காயை தினமும் ஜுஸாக குடிப்பது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகின்றது.



உடல் பருமன் குறையும்



நெல்லிக்காயை ஜுஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள புரோட்டின் அளவை அதிகரித்து கொழுப்புக்களை குறைக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காய் ஜுஸ் அருந்தலாம்.



கண்களுக்கு பாதுகாப்பு



கண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளான கண்புரை, கண் எரிச்சல், கண்களில் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க வாரத்திற்கு ஒருமுறை நெல்லிக்காய் ஜுஸ் அருந்தலாம்.



உடல் சூடு தணியும்



நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுவதுடன், கோடைக்காலங்களில் குடித்து வந்தால் உடல் சூட்டை தணிக்கும்.



இரப்பை கோளாறுகள் தீரும்



வாரம் ஒருமுறை இந்த ஜுஸை குடித்து வந்தால் இரைப்பைக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் குணமாவதுடன், கல்லீரலை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது. 



இதயம் வலிமை பெறும்



நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றுகின்றது. ரத்தத்தை சுத்தமாக வைப்பதுடன், இதயத் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்குவதோடு, இதய தசைகளையும் வலிமையாக்குகின்றது.



எலும்புகளின் ஆரோக்கியம்



உடலில் உள்ள எலும்புகளை வலிமையுடன் வைத்துக்கொள்ளும் நெல்லிக்காய், எளிதில் உடையாமலும் திடமாக வைக்கவும் உதவுகின்றது.



தினமும் சாப்பிடலாமா?



இவ்வாறு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் நெல்லிக்காய் ஜுஸை தினமும் குடிக்கலாமா என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க பலரும் கூறுவார்கள்.



இதற்கு காரணம் ஜுஸாக சாப்பிடும் போது நெல்லிக்காயின் அளவு அதிகரிக்கின்றது. மேலும் நம் உடம்புக்கு வைட்டமின் சி குறைவாகவே தேவைப்படுகின்றது.



ஆனால் நெல்லிக்காய் ஜுஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்படுமாம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம

May20

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

Mar22

வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Feb07

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம

Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Feb07

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ

Feb07

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ

Jan29

சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய

Mar27

சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொ

Oct15

சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ

Jan30

கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத

Feb09

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இரு

Jan20

இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய