More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பில் பெண் பொலிஸ் அதிகாரியின் புது யுக்தி! சிக்கிய பெரும்புள்ளி
கொழும்பில் பெண் பொலிஸ் அதிகாரியின் புது யுக்தி! சிக்கிய பெரும்புள்ளி
Feb 21
கொழும்பில் பெண் பொலிஸ் அதிகாரியின் புது யுக்தி! சிக்கிய பெரும்புள்ளி

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிஸார் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளனர்.



கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தனியார் வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளுக்கான பணத்தை பலருடன் வந்த சந்தேகநபர், சுத்தியலால் பெட்டகத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். 



கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக இருந்த 28 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பெண் பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.



அதற்கமைய பெண் கான்ஸ்டபிள் ஒருவர், குறித்த சந்தேக நபருடன் தொலைபேசியில் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை ஏமாற்றி புறக்கோட்டை பிரதேசத்திற்கு அழைத்து வர நடவடிக்கை  மேற்கொண்டுள்ளார்.



சந்தேகநபர் தனது அடையாளம் தெரியாத காதலியைப் பார்க்கச் சென்றபோது பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்படும் போது, ​​சந்தேகநபர் கொள்ளையடித்த 11 மில்லியன் ரூபாய் பணத்தில் 275,000 ரூபாய் மாத்திரமே கையில் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.



 சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குறித்த பணம் கடுவெல பிரதேசத்தில் உள்ள தனது காதலிக்கு சுமார் 150,000 ரூபாய் பெறுமதியான தளபாடங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை

Apr16

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய

Feb02

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ

Sep30

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி

Jun09

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து 

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந

Mar12

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க

Apr11

கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி

Jan22

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Oct18

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத

May22

கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு

Feb16

இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற

May14

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து

Apr05

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ

Sep18

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே