More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு கீதா குமாரசிங்கவின் பதில்
கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு கீதா குமாரசிங்கவின் பதில்
Feb 22
கொலை செய்து கூரையில் தொங்க விடுவதாக மிரட்டிய வர்த்தகருக்கு கீதா குமாரசிங்கவின் பதில்

கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல் விடுத்த வர்த்தகர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.



நாடாளுமன்ற உறுப்பினர் கீதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை ஊருகஸ்மங்ஹந்திய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.



எனினும், குறித்த சந்தேகநபரை மன்னிப்பதாகக் கூறி தனது பொலிஸ் முறைப்பாட்டை கீதா திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார் என தெரியவருகிறது. 



எல்பிட்டிய கொட்டகனத்தே என்னும் பகுதியைச் சேர்ந்த 60 வயதான வர்த்தகர் ஒருவரே, கீதாவின் வீட்டுக்குள் புகுந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.



கடன் தொகை ஒன்றை மீளச் செலுத்தத் தவறியதனால் கீதா மீது கடும் கோபம் கொண்டு குறித்த வர்த்தகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என கூறப்படுகிறது



எனினும் குறித்த கடன் தொகையைத் தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், வறிய மக்களுக்கு வழங்கியதாகவும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.



இந்த விளக்கத்திற்குச் செவி மடுக்காது கீதாவிற்குக் குறித்த வர்த்தகர் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



கடன் தொகை ஒன்றைக் கேட்டு வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சிசிடிவி காணொளிகளில் பதிவாகியுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.



எனினும், வர்த்தகரின் மனைவியும், மகளும் வந்து கோரியதனால் வர்த்தகருக்கு எதிரான முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு அவரை மன்னித்து விட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி

Sep17

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே

Oct24

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய

Sep22

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத

Feb06

நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு

May01

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக

Mar08

ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Oct24

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த

Jul06

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப

Oct03

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந

Jul20

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமிய

Feb07

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க