அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
932 நாட்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண்கிறார்கள் ரசிகர்கள், சும்மாவே ரசிகர்களின் கொண்டாட்டம் பெரிய அளவில் இருக்கும். இப்போது இத்தனை நாட்களுக்கு பிறகு அவரை காண்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
தமிழகம் முழுவதும் ஒரே கொண்டாட்டம் தான்.
ஆனால் நாமக்கல்லில் முதல் நாள் முதல் காட்சி திரையிட கே.எஸ். திரையரங்கில் கொஞ்சம் தாமதமானது. எனவே கோபம் கொண்ட ரசிகர் ஒருவர் திரையரங்கின் கதவில் நாட்டு வெடிகுண்டு வைக்க முயற்சி செய்துள்ளார்.
அதைப்பார்த்த போலீசார் வெடிகுண்டை அகற்றியதும், ரசிகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.