More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!
உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!
Feb 25
உக்ரைனின் மனிதப் பேரவலத்தை சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனின் மனிதப் பேரவலத்தை, சோகத்தை முள்ளிவாய்க்காலில் கண்டோம்” பிரித்தானியாவின் கென்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான Tom Tugendhat, உக்ரைனில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் காட்சிகளை "ஒரு மனித சோகம்" ("a human tragedy".) என விபரித்திருக்கிறார்.



ரஷ்யாவினதும் விளாடிமிர் புடினினதும் ஒரு “நிர்வாணகரமான” ஆக்கிரமிப்பால் வெளியேற்றப்பட்ட மக்களின் இந்த நெடுவரிசைகளைப் பார்ப்பது பயங்கரமானதும் மிகவும் வேதனையானதும் ஆகும் எனக் கூறும் Tom "குடும்பங்கள் பிரிந்து கிடப்பதையும், பிரிந்து வாழ்வதையும் பற்றி நாம் மிகத் தெளிவாக சிந்திக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.



உண்மைதான் Tom. யுத்தம் எவ்வளவு கொடியது. கொத்துக்கொத்தாக மக்கள் இடம்பெயர்க்கப்படுவதும், வாழ்விடங்களை விட்டு, அவர்கள் தமது குழந்தைகள், செல்லப்பிராணிகளுடன் நகர்வதும், போரில் கேட்பாரின்றி அனாதைகளாக மடிவதும் எவ்வளவு மனிதப் பேரவலம் என்பதை, நீங்கள் எல்லோரும் பார்த்திருக்க, நாம் அனுபவித்தோம் Tom.



அந்த துயர் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையப் போவதில்லை. அந்தக் கொடுமையை, உக்ரைனின் அப்பாவி மக்கள் மட்டும் அல்ல உலகில் யுத்தங்களை எதிர்கொள்ளும் எந்த மக்களும் அனுபவிக்கக் கூடாது.



30 வருடகால யுத்தத்தில் நாம் அனுபவித்ததை இனி எவரும் அனுபவிக்கக் கூடாது. யுத்தம் நிலவிய, நிலவுகின்ற நாடுகளில் அப்பாவி மக்கள் அனுபவித்த, அனுபவிக்கும் கொடூரங்கள் இல்லாது ஒழிய வேண்டும்.



ஆதிக்கப் போட்டிகளுக்கும், சாம்ராஜ்ய விரிவாக்கலுக்கும், வளச் சுறண்டல்களுக்கும், நில, பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கும், இன, மத, காலாசார மேலாதிக்கங்களை நிறுவுவதற்காகவும், ஒவ்வொரு கணமும் உலகில் மக்கள் மரித்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும்.



ரஸ்ய உக்ரைன் போர் ஒரு 3ஆம் உலகப் போராக மாறுவதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். உலக அமைதியை நோக்கி, யுத்தமில்லா வாழ்வை நோக்கி உலகம் ஒன்றுபட வேண்டும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb27

ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

Jan27

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Mar06

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Feb06

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச

May04

 உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி