உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி அழும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது .
உக்ரைனில் 2-வது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 137 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிய தந்தை அழும் வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷியபடைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழும் வீடியோ ஒன்று பாப்பவர்களின் மனதை கலங்கவைத்துள்ளது.
அதில் பிங்க் நிற ஜாக்கெட்டை அணிந்திருக்கும் சிறுமியை தனது தந்தையை கட்டிப்பிடித்து அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.