More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்
இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்
Jan 25
இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் அந்நிய  செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.



இவ்வாறு தொடர்ந்து சிக்கலை அனுபவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்தவகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக ஏற்கனவே 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) நிதியுதவி வழங்கப்பட்டது.



மேலும் இந்தியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,700 கோடி) கூடுதலாக அளிக்கப்பட்டது.



இதைத்தவிர இலங்கையின் மொத்த கையிருப்பை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்று வசதியை இந்தியா அறிவித்தது. அத்துடன் 515 மில்லியன் டாலர் ஆசிய நாணய யூனியன் தீர்வையும் ஒத்திவைத்தது.



இந்த உதவிகளால் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கரைவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக இலங்கையின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.



இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரம் கோடி) நிதியுதவி கேட்டிருப்பதாகவும், இது கிடைக்கும் என நம்புவதாகவும் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் தெரிவித்தார்.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘டெல்லியில் இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன், இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக நாம் ஒரு உதவியை பெற முடிந்தது. அதைப்போல மேலும் 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.



இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்காக சர்வதேச நிதியத்தை அணுகும் வாய்ப்பும் இருப்பதாக கூறிய பெரீஸ், அந்த நிதியத்தின் உறுப்பினராக நாம் இருப்பதால், அதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன என்றும் கூறினார்.



இலங்கையில அன்னிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், முற்றிலுமாக அது தீர்ந்து விடவில்லை எனவும் அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Mar05

இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும

Jan29

நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ

Feb25

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Jan24

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ

Mar03

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Mar08

பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி