More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இரவுநேர அனுமதியற்ற களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 13 பேர் கைது !
இரவுநேர அனுமதியற்ற களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 13 பேர் கைது !
Feb 02
இரவுநேர அனுமதியற்ற களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 13 பேர் கைது !

கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு வந்த இரவு நேர களியாட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 12 வெளிநாட்டவர்கள் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



இந்த களியாட்ட விடுதிக்குள் காணப்பட்ட அனுமதிப்பத்திரம் அற்ற 483 பியர் போத்தல்கள், 6 வைன் போத்தல்கள், உள்நாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 100 சிகரெட்டுக்கள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.



இந்த களியாட்ட விடுதியை வெளிநாட்டு பெண்ணொருவரே நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தவறை ஏற்றுக் கொண்டதன் பின்னர் , 90 000 ரூபா  அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



மேலும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்தமையை களியாட்ட விடுதியின் முகாமையாளர் ஏற்றுக் கொண்டமையால் அவருக்கு 60,000 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.



இதன் பொது பொலிஸ் ஊடகப் பிரிவு ஏனைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec17

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Feb04

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

May26

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா

Sep22

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்

Feb01

கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீ

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Jun04

கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Mar17

மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச