More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால் கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால்  கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி
Feb 02
காணாமல் போன மாணவர் வாழைச்சேனை பொலிஸாரால் கண்டுபிடிப்பு; பெற்றோர் மகிழ்ச்சி

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.



கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த குறித்த மாணவன், வீடு திரும்பாததால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போன மாணவனின் சென்றிருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா - கல்மலை கடலோரத்தில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.



இதனையடுத்து மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் மாணவரை தேடும் நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.



இந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும், அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவைகளை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.



தொடர்ந்து மாணவனின் கைத்தொலைபேசி பாவனையில் இருந்ததை அவதானித்த பொலிஸார், மாணவன் தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.



இதனையடுத்து ஐந்து நாட்களின் பின்னர் நேற்றுமாலை வவுனியா பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.



பெற்றோரை திசை திருப்பவே கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவனை பொலிஸார், பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ

Feb04

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய

Oct01

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய

May19

5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Feb04

நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான

Oct04

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனை

Sep16

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி

Apr08

நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே

Feb03

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்

May21

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்

Jun11

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி

Oct02

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில