ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமில பிரசன்னவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளுக்கு சீல் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு இதற்கான தடையை பெற்றுள்ளது. குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சந்தேகநபர் அந்த இரு வீடுகளையும் தனது மனைவியின் பெயரில் வாங்கியுள்ளார்.
மேலும் இந்த வீடுகள் இரண்டும் ரூ. 3 கோடி 46 இலட்சத்துக்கும் மேல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.