இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. அண்மைக்காலத்தில் கொரோனாவினால் நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் உணவு விநியோக சேவையில் உள்ள சுமார் பத்து பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக்கு உள்ளாகியிருந்த சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன குணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.