More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ரூ.25 கோடி பெறுமதியான டொலர்களை கடத்தியவருக்கு விளக்கமறியல்
ரூ.25 கோடி பெறுமதியான டொலர்களை கடத்தியவருக்கு விளக்கமறியல்
Feb 03
ரூ.25 கோடி பெறுமதியான டொலர்களை கடத்தியவருக்கு விளக்கமறியல்

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு, பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி கடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவு 4 இன் பொறுப்பதிகாரி இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (31) நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.



இதன்போது அவரை இன்று மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல உத்தரவிட்டிருந்தார்.



சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சிஐடிக்கு முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.



நூரா மல்டி ட்ரேடர்ஸ் எனும் நிறுவனம் ஊடாக, பேரீச்சம் பழம், தங்க ஆபரணங்கள் பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில், இலங்கையிலிருந்த 12 இலட்சத்து 65 ஆயிரத்து 882 அமரிக்க டொலர்களை ( இலங்கை பெறுமதியில் 25 கோடியே 82 இலட்சத்து 39 ஆயிரத்து 928 ரூபா) அனுப்பப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக சிஐடியினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.



மேலதிக விசாரணைகளில், இவ்வாறு டொலர்களை அனுப்பியபோதும் அதற்கான பெறுமதியில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிய வந்ததாகவும், அது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சிஐடியின் சட்டவிரோத சொத்து தொடர்பிலான விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில், வெள்ளவத்தையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர்களான மொஹம்மட் அனீப் மொஹம்மட் ஆசிப், மொஹம்மட் நஸார் ஆகிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அதனால் அந்த சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறும் சிஐடியினர் மன்றில் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி கோரினர்.



இதனை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல சந்தேக நபர்கள் இருவரினதும் வெளிநாட்டு பயணத்தை தடை செய்ய உத்தரவிட்டதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிஐடியின் சட்டவிரோத சொத்து க்கள் குறித்த விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையிலேயே மொஹம்மட் அனீப் மொஹம்மட் ஆசிப் எனும் வர்த்தகர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது, விமான நிலையத்தில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை

Oct03

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை

Jan25

பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்

Jul24

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல

Oct14

களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம

Feb20

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய

Mar12

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்

Sep24

தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்

Feb08

கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Oct22

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி

Feb09

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க

Jul16

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த

May20

கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி