மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹுல்ஹுமாலே மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி 24 மணித்தியாலங்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.