More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...
Feb 03
மீனவர் போராட்டத்திற்கு சுமந்திரன்- சாணக்கியன் ஆதரவு; டக்ளஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்...

தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது, சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்துள்ளனர்.



இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் எனவும், இது சட்டவிரோதமான போராட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், மீனவர்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

May19

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ

Sep23

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Apr11

கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி

Jan23

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்

Oct08

முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்

Sep23

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந

May31

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Dec30

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்

Oct14

கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில

Feb15

இலங்கையில் பிரதான தொலைக்காட்சி செய்திகளில் தலைப்புச