இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக களுத்துறை பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல தளுவத்த பிரகதி மாவத்தைக்கு அருகில் கடற்கரை புதர் ஒன்றுக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் கொலை என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நீதவான் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.