More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ள ரஷ்யா! கடும் வேதனையில் உக்ரைன் அதிபர்
மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ள ரஷ்யா! கடும் வேதனையில் உக்ரைன் அதிபர்
Mar 09
மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ள ரஷ்யா! கடும் வேதனையில் உக்ரைன் அதிபர்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.



அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.



வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இந்நிலையில்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு  உரையாற்றிய காணொளியொன்று வெளியாகி இருக்கின்றது. அதில்,



‘உக்ரைனுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தனது நட்பு நாடான பெலாரஸ் வழியாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், பாதுகாப்பான முறையில் மக்கள் வெளியே அது அனுமதிக்கவில்லை. ஒரு சிறிய பாதையை திறப்பதற்கு பதிலாக, பெரிய வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கிறது.



ரஷ்யாவுடன் மனிதாபிமான அடிப்படையில் போட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக உக்ரைனுக்கு கிடைத்தது ரஷ்ய டாங்கிகளும், ராக்கெட்டுகளும்தான். இன்னும் சொல்லப்போனால், மக்கள் வெளியேறுவதற்கான மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை அது புதைத்து வைத்துள்ளது.



மரியுபோல் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு, மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு கூட அது அனுமதிக்கவில்லை.



உக்ரைன் - ரஷ்ய படைகளுக்கு இடையிலான இடைவெளி பல நகரங்களில் குறைந்துள்ளது. ஒரு உக்ரைன் வீரருக்கு 10 ரஷ்ய வீரர்கள் வருகிறார்கள். ஒரு உக்ரைன் பீரங்கிக்கு 50 பீரங்கிகளை ரஷ்யா அனுப்பியுள்ளது. எங்கள் நாட்டின் நகருக்குள் அவர்கள் நுழையலாம். ஆனால், அங்கு அவர்கள் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்,’’ என்று பேசியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண

Mar10

உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள

Sep25

ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்

Aug22

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ

Mar13

உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர

Mar12

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு

Apr11

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட

Oct16

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Jun15

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்

Feb25

 ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ

Oct21

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

Mar07

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர

Apr26

கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர

Jun23

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர