More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி! -
பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி! -
Mar 09
பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி! -

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.



பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,



“எங்கள் நிலத்துக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம். காடுகளிலும், வயல்களிலும், கரைகளிலும், தெருக்களிலும் போராடுவோம். நமக்கானதை நாங்கள் இழக்க விரும்பவில்லை, நாங்கள் தொடங்காத, நாங்கள் விரும்பாத போரை உக்ரைன் நடத்தி வருகிறது.



உக்ரேனியர்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். நாஜிக்கள் உங்கள் நாட்டிற்கு எதிராகப் போராடத் தொடங்கியபோது நீங்கள் உங்கள் நாட்டை இழக்க விரும்பவில்லை, நீங்கள் பிரிட்டனுக்காகப் போராட வேண்டியிருந்தது.



இந்த யுத்தத்தில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இவர்கள் வாழக்கூடிய குழந்தைகள், ஆனால் அவர்களை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், “பிரித்தானியா எங்கள் நட்பு நாடுகளும் எங்கள் உக்ரேனிய நண்பர்களுக்கு அவர்களின் தாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான ஆயுதங்களை வழங்குவதில் அழுத்தம் கொடுப்பதில் உறுதியாக உள்ளனர்” என தெரிவித்தார்.



ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் துணையை கடுமையாக்க பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்றும் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த பேரழிவு முயற்சியில் விளாடிமிர் புடின் தோல்வியடைந்து, உக்ரைன் மீண்டும் சுதந்திரம் பெறும் வரை, இராஜதந்திர, மனிதாபிமான மற்றும் பொருளாதாரம் என்று எங்களால் முடிந்த ஒவ்வொரு முறையையும் யன்படுத்துவோம்.” அவர் மேலும் கூறினார்.



இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதியின் உரைக்கு முன்னரும், பின்னரும் சபையில் கூடியிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.      






வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,

Sep20

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது

Mar09

அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ

Jul27

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட

Feb11

இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ

Mar26

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு

Jan12

 தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர

Mar13

மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட

May04

தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச

Feb23

இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக

Mar01

சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு

Jul31

பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா

Aug30
Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்