உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக பிரபல உணவகமான மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் அப்பிள், லிவிஸ்,நெட்பிலிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், தற்போது மைக்டொனால்ட் இணைந்துள்ளது.
இதன்படி ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மைக்டொனால்ட் அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள மைக்டொனால்டின் 850 உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில்,"உக்ரைனில் நடந்துவரும் தேவையற்ற மனித துன்பங்களை நாங்கள் புறக்கணிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.