More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Mar 09
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! - அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.



அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.



இலங்கை அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் அரசாங்கமாகும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



மனித உரிமைகள் பேரவையின் 45 அங்கத்துவ நாடுகளில் 31 நாடுகள் இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்துள்ள சாதக தன்மைகள் தொடர்பில் வரவேற்று பேசியுள்ளன.



இது மிகவும் சிறந்த முன்னேற்றமாகும். காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 14 000 இற்கும் அதிக முறைப்பாடுகள் இலங்கை பிரஜைகளாவர். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என எந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தாலும் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.



சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவை இடம்பெற்றிருக்கின்றன. தென் மாகாணத்தில் 1980 களில் காணாமல் போனோரும் உள்ளனர். இதற்கிடையில் பல அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளன.



எனினும் இன்று எமது ஆட்சியில் அதற்கான உறுதியான தீர்வினை வழங்கி , பொறிமுறையொன்றை கட்டியெழுப்பி அதனை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளுக்குள்ளும் இது தொடர்பில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இதனை ஒரு கறுப்பு பகுதியாகப் பார்க்க நாம் விரும்பவில்லை. அவர்கள் இதனை தெரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” என கூறினார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை

Feb16

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப

Mar03

 

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Feb15

இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Jan24

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Jan25

இலங்கையில் அந்நிய  செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

Mar04

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப