உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,
அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை.
இந்த பொய்யான கூற்றுகளைக் மேற்கொண்டு, அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம் எனத் தெரிவித்துள்ளார்.