More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னை அம்மா உணவகங்களில் உணவு விற்பனை கடும் சரிவு
சென்னை அம்மா உணவகங்களில் உணவு விற்பனை கடும் சரிவு
Mar 16
சென்னை அம்மா உணவகங்களில் உணவு விற்பனை கடும் சரிவு

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டில் ரூ.120 கோடி செலவாகி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏழை மக்கள் பசியாறுவதற்காக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டவை அம்மா உணவகங்கள்.இந்த அம்மா உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளிலும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.



காலையில் இட்லி, பொங்கல் ஆகியவை சுடச்சுட தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இரவில் ரூ.1.50-க்கு சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது.



ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அம்மா உணவகங்களை மூடப்போவதாக தகவல்கள் பரவியது. ஆனால் அம்மா உணவகங்கள் எப்போதும் போல செயல்பட்டு வருகிறது.



அதே நேரத்தில் அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதாரணத்துக்கு சில அம்மா உணவகங்களில் ரூ.300 வரையிலேயே தினசரி வருவாய் உள்ளதாகவும், ஆனால் அங்கு பணிபுரியும் பெண்களின் ஊதியம் உள்ளிட்ட செலவு வகைகள் ரூ.1,800 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இப்படி அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தபோதிலும் அதனை அரசு தொடர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது.



சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டில் ரூ.120 கோடி செலவாகி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுகிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மணலி பகுதியில் மட்டும் நீர்நிலை பகுதியில் செயல்பட்ட அம்மா உணவகம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது என்றும் மொத்தமுள்ள 407 அம்மா உணவகங்களில் ஏற்கனவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 4 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் 5 உணவகங்கள் தவிர மீதமுள்ள 402 உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Jun02

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5

Jul17

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப

Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர

Sep26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த

Jul08

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார

Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Aug09

கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர

Feb12

உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

Jun10

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <

Jun24