உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த படையினரால் டாங்கியால் இடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 37-வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யூரி மெட்வடேவ் (Colonel Yuri Medvedev), அவரது பிரிவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கோபமடைந்த அவரது படையினரால் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு தாக்கப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் ஆரம்ப அறிக்கையின்படி கர்னல் மெட்வெடேவ் "கொல்லப்பட்டதாக" கூறப்பட்டது, ஆனால் அவர் காலில் காயம் அடைந்து பெலாரஸுக்கு வெளியேற்றப்பட்டார் என்ற பின்னர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உக்ரைனில் ரஷ்ய படைகள் எதிர்கொள்ளும் சில சவால்கள் பற்றிய தெளிவை அளிக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
