More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சீனாவின் கனவை தவிடுபொடியாக்கிய இந்தியா!
சீனாவின் கனவை தவிடுபொடியாக்கிய இந்தியா!
Mar 29
சீனாவின் கனவை தவிடுபொடியாக்கிய இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.



இதன்படி,  .இந்திய அரசின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்ட மென்பொருளுடன் கூடிய நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன.



இதேவேளை யாழ்ப்பாணத்தை தனது  ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக சீனா முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, இலங்கை அரசாங்கம்  இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Gallery



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06


உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Aug12