More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 25 வயது மனைவியுடன் டிக்டாக்கில் கலக்கிய 45 வயது விவசாயி!
25 வயது மனைவியுடன் டிக்டாக்கில் கலக்கிய 45 வயது விவசாயி!
Mar 31
25 வயது மனைவியுடன் டிக்டாக்கில் கலக்கிய 45 வயது விவசாயி!

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் வைரலாகிய 45 வயது விவசாயி திருமணமான ஐந்து மாதத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



25 வயது பெண்ணை மணந்த விவசாயி



கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(45), இவர் மேனகா என்ற 25 வயது பெண்ணை திருமணம் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.



மேனகா கடந்த வருடம் அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்டவர் ஆவார். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.



சங்கரண்ணா சற்று வயதான தோற்றத்தில் காணப்பட்டதால் நெட்டிசன்கள் 60 வயது என்று தீர்மாணித்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். இவர்களின் திருமணம் சமூகவலைத்தளத்தில் பெரும் பேச்சு பொருளாக இருந்தது.



மனைவியுடன் டிக்டாக்கில் சங்கரண்ணா



நெட்டிசன்களின் கேலி கிண்டலை கண்டுகொள்ளாத குறித்த தம்பதி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே கொண்டு சென்றள்ளனர்.அவ்வப்போது டிக்டாக்கிலும் காணொளி வெளியிட்டு அசத்தி வந்தனர். இதில் மேனகா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.



சங்கரண்ணா திடீர் தற்கொலை



இந்நிலையில் சங்கரண்ணா திடீரென மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இதற்கு காரணம் சங்கரண்ணாவின் அம்மாவால் ஏற்பட்ட பிரச்சினையே என்று கூறப்படுகின்றது. ஆம் மாமியார் மருமகள் பிரச்சினையில் பெங்களூர் சென்று தனியாக வாழலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார் மேனகா.



ஆனால் தனது தாயை விட்டு வரமுடியாது என்று கூறியதால் இருக்கும் நாளுக்கு நாள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.



மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சங்கரண்ணாவின் உடலை பார்த்து மனைவி மற்றும் அம்மாவும் கதறி அழுதுள்ளனர். பின்பு பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



சங்கரண்ணாவின் தாய் குற்றச்சாட்டு



சங்கரண்ணாவின் தாய் ரங்கம்மா கூறுகையில், ''நேற்று முன்தினம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தேன்... அப்போது என் மருமகள் நாயை அவிழ்த்து விட்டார்..



நான் பயத்தில் கீழே விழுந்துட்டேன். 'இது சம்பந்தமாக என் மகன்கிட்ட சொன்னேன்.. என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு மகனிடம் மருமகள் கூறியதால், ஏற்பட்ட சண்டையிலே மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.



மனைவியின் குற்றச்சாட்டு



கணவரின் தற்கொலை குறித்து மோகனா கூறுகையில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தோம், எனது மாமியார் என்னிடம் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டும், தனது கணவரிடம் தன்னைப் பற்றி தவறாக பழி போட்டும் குற்றம் சாட்டினார்கள்.



மேலும் தனது தாய் தந்தையுடன் பேசக்கூட அனுமதிக்காமல் என்னிடம் சண்டையிட்டார். இப்படி எல்லாம் இருந்தால் இங்கே குடும்பம் நடத்த முடியாது என்று என் கணவர் கூறியதற்கு, மாமியார், அப்படின்னா செத்து போ என்று என் கணவரை திட்டினார்.



இதனால் தான் தனது கணவர் தற்கொலைசெய்து கொண்டார் என்றும் தற்போது தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை

Mar09

 உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய

Sep13

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

Mar29

கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

May26

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Jun23
Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Jun11

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப

Jul20

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n

Mar23

வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்