மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச்சங்கேணி பகுதியில் கா.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் தந்தை இறந்த நிலையில், தாயார் வெளிநாடு சென்ற சூழலில் , அம்மாணவி பனிச்சங்கேணியில் வசிக்கும் திருமணமான சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு உணவு உண்ட பின்னர் உறங்கச்சென்ற மாணவி , அவரது வீட்டிலேயே காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவியின் காது , மூக்கு மற்றும் பெண்ணுறுப்பில் இரத்தம் வழிந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக, வைத்தியசாலை பிரேத பரிசோதனை பிரிவில் சேவையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுவரை உடற்கூற்று பரிசோதனை முடிவடையவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகிக்கும் ஒருவரை, அங்குள்ள ஆயுதக்குழு ஒன்று காப்பாற்ற பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.