உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 என்ற விமானம், உக்ரைனில் தயாரிக்கப்பட்டது.
உக்ரைன் ஹொஸ்டமெல் விமான நிலையத்திலேயே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானம் இறுதியாக ஹொஸ்டமெல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமைக்கான தரவுகள் காணப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் யுத்தத்தின் போதே இந்த விமானம் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.